மும்பை அருகே 3 அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை – பிவாண்டி பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
குறித்த இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 பேரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஒரு குழந்தை உட்பட 11 பேரை மீட்டனர்.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.
அதில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையினுள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் விபத்திற்குள்ளான கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
