தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், சிகிச்சை பெற்று வருவோர், பரிசோதனை விவரம் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய அறிக்கையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் புதிதாக 5,344 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,47,344 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 982 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய அறிவிப்பில் மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதனை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை கூறியுள்ளது.
மேலும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் இதுவரை மொத்தம் 4,91,971 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
