May 31, 2023 4:23 pm

கோவையில் தடுத்து நிறுத்தப்பட்ட கனிமொழி வீதியில் அமர்ந்து போராட்டம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க கோவை விமான நிலையத்திலிருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு சென்று கொண்டிருந்த கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க.வினர் கற்பகம் கல்லூரி அருகே வந்த போது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பொலிஸாரினால் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து வீதியில் அமர்ந்த கனிமொழி எம்.பி., தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்