செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இப்படியும் செய்வார்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்

இப்படியும் செய்வார்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்

1 minutes read

பிரதமர் நரேந்திர மோடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அமெரிக்க சுற்று பயணத்தை தொடர்ந்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடியின் செயலை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் ‘நாளைய புகைப்படம்’ எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.

 ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதே புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை செப்டம்பர் 26 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார்.

இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் இணைய விஷமிகளால் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.