Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார...

பொத்துஹெர பகுதியில் விபத்து -குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து...

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை!

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி முல்லை...

வீட்டு சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய குழு!

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே,...

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில்...

வரலாற்றின் முதல் தடவையாக செங்கோலுடன் ஆரம்பமான யாழ்.மாநகரசபை அமர்வு!

அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

ஆசிரியர்

இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலம் தமிழ்நாடு!

சென்னை: இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அச்சுத்தொழில் என்பது மற்ற தொழில்களைப் போல கிடையாது. அச்சுத்தொழில் என்ற சொன்னாலே அது நச்சுத் தொழில் என்று அந்தக் காலத்திலே சொல்வார்கள்.

ஆனாலும் அச்சுத்தொழிலில் ஆர்வமாக இருப்பவராக இருந்தால், எவ்வளவுதான் சிரமம் இருந்தாலும் அந்தத் தொழிலை அவர்கள் விட்டு விட்டு சென்றுவிட மாட்டார்கள். வைராக்கியமாக நடத்துவார்கள். லாப-நஷ்டம் பார்க்காமல் அச்சுத் தொழிலை நடத்துவார்கள். என்னுடைய பள்ளிக் காலமாக இருந்தாலும் சரி கல்லூரி காலமாக இருந்தாலும் முரசொலி நாளிதழில் வேலை பார்ப்பதை நான் வழக்கமாக தான் வைத்துக்கொண்டிருந்தேன்.

முதலமைச்சராக ஆனபிறகு முரசொலிக்கு நான் அடிக்கடி செல்லக்கூடிய வாய்ப்பு பெறாவிட்டாலும் வாய்ப்பு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்போதும் நான் சென்று கொண்டிருக்கிறேன். புதிய அரசு அமைந்த பிறகு எத்தனையோ முன்னெடுப்புகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். திமுக அரசு அமைந்த இந்த நான்கு மாத காலத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளது.

இரண்டு முக்கியமான மாநாடுகளை அரசு நடத்தியிருக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். மிக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற மாநாடு அது. தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே எனது லட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக தொழில்புரிவதை எளிமை ஆக்க ஒற்றைச் சாளர முறை இணையதளம் 2.0வை நான் தொடங்கி வைத்தேன்.

புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும். அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு 35 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. முதன் முதலாக 17,141 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது.

இதன்மூலமாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னால் ஏற்றுமதி தொடர்பான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தினோம். ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்று அந்த மாநாட்டுக்குத் தலைப்பு கொடுத்து இருந்தோம். அன்றைய தினம் 2,180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு அதற்கான முழுமூச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறோம். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுகுறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதி ஆகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்து திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் தொடங்கி – தமிழக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் கவனத்தை இன்றைய தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. என்னுடைய வருத்தமெல்லாம் சிறு தவறு நடக்கும்போது அதனை பெரிதாக விமர்சிக்கும் சில பத்திரிகைகள் – பெரிய நன்மைகளைச் செய்யும்போது சிறு அளவில் கூட பாராட்டுவது இல்லையே என்பதுதான். பாராட்ட வேண்டியதற்கு பாராட்டுபவருக்குதான் திட்டுவதற்கான உரிமையும் இருக்கிறது என்பதை அனைத்து ஊடகங்களும் மறந்துவிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021

மேஷம்மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள்.

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

மேலும் பதிவுகள்

மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு…!

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன்,...

இலங்கை காலநிலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக...

மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா!

பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம்...

கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து...

இலங்கையில் உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி!

இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சி-இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்...

பிந்திய செய்திகள்

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா…!

2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர்,...

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை!

ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி...

துயர் பகிர்வு