இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டினருக்கான விதிமுறை கடுமையாக்கியது மத்திய அரசு!

புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வழக்கமான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் இயக்கும் முடிவை ஆய்வு செய்துவரும் மத்திய அரசு, வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது.

மேலும், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட நாடுகளை ‘ஆபத்தில் உள்ள’ நாடுகளாக பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளையும் நீக்கியது.

பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஆபத்தில் உள்ள நாடுகளாக பட்டியலிட்ட மத்திய அரசு, அந்நாடுகளில் இருந்து வருபவர்கள் பயணத்திற்கு முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தில் நடத்தப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையின் முடிவுகள் வரும் வரை அங்கேயே காத்திருக்க வேண்டும் எனவும், சோதனையில் நெகடிவ் என தெரியவந்தாலும், வீட்டுத்தனிமைப்படுத்தல் கட்டாயமானது எனவும் அறிவித்துள்ளது.

ஆசிரியர்