செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

1 minutes read

பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்புக் காரணமாக சுயநினைவை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் அவர்.

“திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமியின் மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.