December 7, 2023 7:48 pm

மோட்டார் பிரியர்களுக்கு பஜாஜ் இன் புதிய வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பஜாஜ்  நிறுவனம் தனது புதிய மோட்டார் பைக்கை  இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் N150 மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பைக் ஆகும். இதுதவிர பஜாஜ் பல்சர் P150 மற்றும் பல்சர் 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

புதிய பல்சர் மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த என்ஜின் 14.5 ஹெச்.பி. பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 134, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்