Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாபய ராஜபக்வின் வெற்றியை தமிழர்கள் பலரும் கொண்டாடுகின்றனர்….

கோட்டாபய ராஜபக்வின் வெற்றியை தமிழர்கள் பலரும் கொண்டாடுகின்றனர்….

1 minutes read

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிளிநொச்சி பொது சந்தைக்கு முன்பாக பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதுடன் பொங்கலும் இடம்பெற்றது. அத்துடன்  வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More