October 4, 2023 5:41 pm

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் |19ஆம் ஆண்டு பொங்குதமிழ் பிரகடனம் .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் 19ஆம் ஆண்டு பொங்குதமிழ் பிரகடனத்தின் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் இன்று17/1/2020 வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பைப் பாதுகாக்க பின்வரும் தீர்மானங்கள்  முன்வைக்க பட்டது .

1. வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
2. தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
3. தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்