Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும்….

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும்….

1 minutes read

இலங்கையின்  72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில்  இன்று, எதிர்வரும் 31 மற்றும் எதிர்வரும் 2, 3 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More