Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...

பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி..

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்...

ஆடை விற்பனையக வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி

நீர்கொழும்பு- மாநகர சபை அங்காடி கடைத்தொகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் பராமரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று...

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது யாழ்...

ஆசிரியர்

பெண்களை சீரழிக்கும் மனிதநேயமற்ற வெறியர்கள் .

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை.

இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும் இடம் என பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

அதனை தங்கமுடியாத சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேற முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நம் தமிழர் பிரதேசத்தில் தொடர்கதையாகவே இருக்கின்றது.

இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் நடத்தைகளே.

இதனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு பல்கலைகழகங்களில் கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர்.

இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?

இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் சிலர் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்றுள்ளார் ஓர் மாணவி.

குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறு நிர்ப்பந்தித்ததுடன்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். இந்நிலையில் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள். நாளை உங்கள் சகோதரியோ அல்லது உங்கள் வழ்க்கைத் துணையோ இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்.

நம் தமிழினத்திற்கு நீங்கள் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாய் இல்லை. காலம் காலமாக நம் மூதாதையர்கள் கட்டிக்காத்த பண்புகளை இழிவு படுத்தாதீர்கள்.

கடந்த பத்து வருடங்களிற்கு முன்னர் இதை நீங்கள் செய்திருந்தால் இன்று உங்கள் நிலை வேறுமாதிரியாகவிருக்கும். வரலாறுகள் தெரியவில்லை எனில் பெற்றோர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாளைய சமுதாயம் உங்களைபோன்றவர்கள் கைகளில் என்பதை நினைக்கும்போது மனம் கலங்குகின்றது.

பெண்தானே என இழிவாக நினைக்காதீர்கள்… உங்களை ஆக்கத்தெரிந்த அவளுக்கு அழிக்கவும் தெரியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

குறித்த புகைப்படத்தில் உள்ளவர்களே மாணவிகளிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டவர்கள் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இப்படியாணவர்களின் இந்த சீரழிவான நடவடிக்கைக்கு பெற்றோர்களும் புலம்பெயர்வாழ் உறவுகளான சில பரதேசிகளுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சைக்கிளிலும் கால்நடையாகவும், பேருந்துகளிலுமே பலகலைக்கழகங்களுக்கு பிள்ளைகள் சென்றுவந்தார்கள். பெற்றவர்கள் கஸ்ரப்படுவதை உணர்ந்து கொண்ட சமுதாயமாக அக்காலம் அமைந்திருந்தது.

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது . பிள்ளைகள் பல்கலகழகத்திற்கு தேர்வாகிவிட்டார்கள் என வெளிநாட்டிற்கு தொலைபேசி அழைப்புக்கள் பறக்க, அங்கு குளிரில் உறைந்து வயிற்றைகட்டி வாயைகட்டி சேமிக்கின்ற காசில் 8 லட்சம் 10 லட்சம் என மோட்டார்சைக்கிள் வாங்கு என யோசிக்காமல் பணம் அனுப்புபவர்களால்தான் இவ்வாறான ஊதாரிகள் உருவாக்கப்படுகின்றார்கள்.

ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே. இப்படியான ஊதாரிகளையும் ஒழுக்க கேடானவர்களையும் உருவாக்குவது ரத்தம் உறையவைத்து நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான். அத்துடன் இந்த காவாலிகளை பெற்ற பெற்றோர்களே உங்களுக்கும்தான். பத்துபேரிடம் கையேந்தி மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுத்துதான் உங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் விடுகின்ற இவ்வாறான தவறுகளால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நீங்களே இருண்ட யுகத்திற்கு அழைத்துசெல்கின்றீர்கள் என்பதை மறவாதிருங்கள். ஊதாரியாக உங்கள் பிள்ளைகள் வளர யார் காரணமோ அவர்களிடமெ நாளை பிள்ளைகளின் இறுதி கிரிகைகளுக்காவும் பணம் கேட்கவேண்டிய தேவை ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பாரம்பரியத்திற்கும் பழக்கவழக்கத்திற்கு பெயர்போன வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை எப்படி இருக்கின்றது தெரிகின்றதா? இப்படியொரு கேவலமான கலாச்சாரத்தை உருவாக்கவா யுத்த காலத்தில் உங்கள் பிள்ளைகளை பாதுகாத்தீர்கள்? நாளைய சமுதாயம் மண்ணோடு போவதற்கு யார் காரணம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நிலமை இப்படியே சென்றால் யாழ்ப்பாண சமூகம் என்ற ஒரு வரலாறே நாளைய சந்ததிகளின் சாபக்கேடாய் அமைந்துவிடும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியானது

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா....

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம்

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி...

தொடர்புச் செய்திகள்

குடும்ப தகரராறில் சாம்பலாகிய வீடு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

1/2KG கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1/2KG கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை...

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம் ஊடகவிலாளர்களையும் சந்திக்க ஆசைப்படுகின்றாராம் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக சந்தேகிக்கப்படும் சுவிஸ் போதகரான சற்குணம் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது...

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

மேலும் பதிவுகள்

நார்த்திசுக் கட்டி என்பது என்ன?

பெண்களுக்கு அடி வயிற்றில் மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1. கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்...

சி.வி.விக்னேஸ்வரன் , மாவைசேனாதிராஜா இருவருக்கும் இடையில் சந்திப்பு!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சி.வி.விக்னேஸ்வரனின் நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்று...

சற்றுமுன் ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்.

கட்டுநாயக்க காவல் துறைபிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சொகுசு கார் வாங்கிய பகத் பாசில், நஸ்ரியா

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன காரை வாங்கியுள்ளனர். மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அந்தக் காரின் ஷோரூம்...

இலங்கையின் ஆடைஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!

2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடே உடற்பயிற்சி. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன்,...

பிந்திய செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்

தேவையான பொருட்கள்: பூண்டு - 3-4 பல் தண்ணீர் -  ஒரு தம்ளர்இஞ்சி - ஒரு துண்டுதேன் - சுவைக்கு ஏற்பஎலுமிச்சை...

ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இதைத்தான் நம் முன்னோர்கள் தோப்புக்கரணம் என்றனர். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும்....

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

அமெரிக்காவில் 84 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

துயர் பகிர்வு