September 21, 2023 2:08 pm

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் நிறுவனங்களிற்கான உதவிகள் அங்கஜன் இராமநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளிற்கு தலா ஒரு லட்சம் பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கி 12 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.  இதே வேளை நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 290.000.00 பெறுமதியான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் போராளிகளை இன்றும் நாம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்றே அழைக்கின்றோம். இதனை எம்மால் மாற்ற முடியாது உள்ளது. ஏனெனில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இவர்களின் வாழ்வினை முன்னுற்றுவதற்காக நாம் முழுமையாக எதையும் செய்யவில்லை.
இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இவர்களும் ஏனைய மக்கள் போன்று பாதிக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்