ரயில் வண்டியொன்று பாடசாலை பஸ் வண்யொன்றுடன் மோதுண்டு விபத்து

கொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சமீபமாக உள்ள ரயில்வே கடவையில் எரிபொருளை ஏற்றிச்சென்ற ரயில் வண்டியொன்று பாடசாலை பஸ் வண்யொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

கொலன்னாவ பெற்றோலிய கூட்டுதாபன களஞ்சியத்திற்கு எரிபொருளை ஏற்றிச்செல்ல வந்த ரயில் வண்டியொன்று அங்கு பிரவேசித்த பின்னர் ரயில்வே கடவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அப்போது பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று ரயில்வே கடவையின் ஊடாக பயணித்துள்ளது. ரயில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்னோக்கி நகர்ந்த ரயில் பஸ் வண்டியில் மோதுண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றன்ர்.

அப்போது கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளின் 20 மாணவர்கள் பஸ் வண்டியில் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர். ரயில் வண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. வெல்லம்பிட்டி பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்