அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி களஞ்சியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, உணவு ஆணையாளர் திணைக்களத்தின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்ட அரிசி, சந்தைக்கு விநியோகிக்கப்படும். இதன்மூலம் அரிசி விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் சதொச ஊடாக சந்தைக்கு அரிசியை விநியோகிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்