இலங்கையில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடுமுழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு, அவர்களைத் தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

ஆசிரியர்