Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்மடுநகர் வட்டாரத்திற்கு பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி.

கல்மடுநகர் வட்டாரத்திற்கு பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி.

1 minutes read

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட கல்மடுநகர் வட்டாரத்திற்கு 2018.05.01 தொடக்கம் 2019.05.01 வரை பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் கரைச்சி பிரதேச சபையின் நிதிமூலமும் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலும் மேற்ப்பார்வையிலும் கட்டைக்காடு 2ம்குறுக்கு வீதிக்கு 492000.00 ஒதுக்கீட்டில் பெட்டிப்பாலமும் ,தர்மபுரம் பொது மயானத்திற்கு 660000.00 ஒதுக்கீட்டில் எரி கொட்டகையும் ,தர்மபுரம் 13ம் குறுக்கு வீதிக்கு 492000.00 ஒதுக்கீட்டில் பெட்டிப்பாலமும் ,கல்மடுநகர் அம்மன் கோவில் வீதித்திருத்தம் 492000.00 ஒதுக்கீட்டில்,பெட்டிப்பாலம் அமைத்தல் குளக்கட்டுவீதி சம்புக்குளம் 492000.00 ஒதுக்கீட்டிலுமாக ரூபா2628000 இற்கான வேலைகளும்

ஊரெழுச்சி வேலைத் திட்டம் நிதிமூலம் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில் வீதி திருத்தம் சம்புக்குளம் 2மில்லியன்,வீதி திருத்தம் நாவல்நகர் கல்மடுநகர் 2 மில்லியன்,வீதி திருத்தம் 8ம் யூனிட் வீதி 2 மில்லியன்,வீதி திருத்தம் ரங்கன் குடியிருப்பு 2 மில்லியன் என ரூபா800000 இற்கான வேலைகளும்

மாகாண குறித்தொதுக்கப்பட்டநிதியிலும் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில்வட்டாரம் முழுவது 596000.00 ரூபா ஒதுக்கீட்டில் 70மின்விளக்குகள் பொருத்துதலும் ,தர்மபுரம் 13 ஆம் யூனிட் வீதித்திருத்தம் (கிரவல்) 0.2 மில்லியன் ஒதுக்கீட்டிளுமாக ரூபா 796000 இற்கான வேலைகளும் செய்யப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து சபை பொறுப்பெடுக்கப்பட்ட 2018.05.01 தொடக்கம் 2019.05.01 வரை கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலும் மேற்ப்பார்வையிலும் ரூபா 2628000 இற்கான வேலைகளும் ஊரெழுச்சி வேலைத் திட்டம் நிதிமூலம் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில் ரூபா 800000 இற்கான வேலைகளும் மாகாண குறித்தொதுக்கப்பட்டநிதியிலும் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில் ரூபா 796000 இற்கான வேலைகளுமாக ரூபா 11424000.00 இற்கு அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More