கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்.

கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் நான்கு பேர் மதவாச்சி, கோமரன்கடவெல பிரதேச வாவியில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர்.பதுளை ஹாலி -எல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு வந்திருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோமரன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்