15 வயதுச் சிறுமியை அழைத்துச் சென்ற இராணுவ வீரர் கைது.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வான் எல பகுதியில் 15 வயதுச் சிறுமியை, வீட்டாருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சிறுமியின் பாட்டனார், திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு குறித்து துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், உடனடியாக அநுராதபுரம் – மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வைக்கப்பட்டிருந்த ​சிறுமியை மீட்டு, இராணுவ வீரரை அன்றிரவே கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், யாழ்ப்பாணம் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் மிஹிந்தலை, மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த என்.சஞ்சீவ நிமல சேன (23 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர்