அங்கஜன் ராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தீவகப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவகப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்