அனைத்து பாடசாலைக்கும் முன்னுதாரணம் இதுவாகும்..

யாழ்/சென் .ஜான் போஸ்கோஸ் வித்தியாலய(Jaffna . St.John Boscos Vidayalaya ) விளையாட்டுப்போட்டி சிறந்த திட்டமிடலின் கீழ் சிறப்பாக இன்று நடைபெற்றது.

உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டுக்கள் யாவும் இனிதே முடிவுற்றது என்பது குறிப்பிட தக்க விடயம் .

மிக நேர்த்தியாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் பங்கு பற்றியது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மாணவர்கள் அனைவரும் மிகவும் நேர்த்தியாக விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டுகளில் பங்குபற்றிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் ஒரு படி சிறப்பாக இருந்தது.

குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி குறிக்கப்பட்ட நேரத்தில் முடிவுற்றது. பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் ஆர்வத்தோடு விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளித்தனர். அதிபர்
அருட்சகோதரி அஞ்சலிகா இப் பாடசாலையை மிக நேர்த்தியாக நடாத்தி வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

ஆசிரியர்