
முல்லைத்தீவு பகுதியில் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் பல லட்சம் செலவில் ஒருலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்தது வைத்துள்ளனர்
சுற்றுச்சூழல் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு முல்லைதீவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் கரைதுறைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து மரக் கன்றுகளை நடும் பணியை இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்
இன் நிகழ்வில் கரைதுறைப்பற்று சபை தவிசாளர் உறுப்பினர்கள் அவலோன் நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
அவலோன் நிறுவனம் கடந்த பல வருடங்களாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது