Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் கண்காணிப்பில் – சுகாதார அமைச்சு!

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் கண்காணிப்பில் – சுகாதார அமைச்சு!

1 minutes read

சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க, இலங்கையில் சுமார் 4443 சீன நாட்டினர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சீனாவின் தற்போது நிலைமை ஒரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும் தினசரி சுமார் 40 பேரே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.

அவ்வாறு சீனாவில் அந்த எண்ணிக்கையில் கூட ஒரு வீழ்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்த அனில் ஜசிங்க, இப்போது வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலியே என்றும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More