8ஆவது இலங்கையருக்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

8ஆவது இலங்கையருக்கும் கொரோனா தொற்று!இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூவர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இன்று (சனிக்கிழமை) இருவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர் 42 வயதுடைய ஆண் எனவும், இத்தாலியில் இருந்து வந்த இவரை கந்தக்காடு தனிமைப்படுத்தும் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களுக்கே இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஒட்டுமொத்தமாக இலங்கையில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் நாட்டின் பல பகுதிகளில் 15 வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்களை இரண்டு வாரங்களுக்கு இரத்துச் செய்வதாகவும், இவ்வாறு பெருமளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள் இடம்பெறுவதை அனுமதிக்க வேண்டாம் எனவும் பொலிஸாருக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆசிரியர்