தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந் நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் 25.03.2020 அன்று வவுனியா,செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 400 மேற்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஆசிரியர்