கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றைய தினம் இந்த வீதியை முழுமையாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.குறித்த பகுதியில் வாழும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதனை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை கொழும்பில் கிராண்பாஸ் உட்பட பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை பொலனறுவை வைத்தியசாலையின் இரண்டு வார்ட் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.கொரோனா நோயாளர் ஒருவர் சிகிச்சை பெற வந்ததையடுத்தே இவ்வாறு மூடப்பட்டன. அங்கு பணி புரிந்த தாதியர்மாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.