இராணுவ கோப்ரலின் தற்கொலை முயற்சி …

இன்று (11/05/2020) மாலை மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய இராணுவ படை முகாமில்  இராணுவ கோப்ரல் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள 4 ஆவது கெமுனு படைப்பிரிவில் கடமையாற்றிவரும் இரத்தினபுரியைச் சோந்த 23 வயதுடைய கோப்ரல் சம்பவதினமான இன்று மாலை 5.30 மணியளவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இதன் போது, படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றதுடன் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்