வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணம் என்ன ஆராயவேண்டும் :ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என  தெரிவித்தார்.

நாட்டில்  மீண்டும் பொருளாதார செயற்பாடுகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் . நோய்த்தொற்றினால்  பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் திட்டங்களை முன்னெடுக்கும் போது இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து பரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட் 19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று(11/05/2020) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆசிரியர்