முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நபரொருவர் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளநிலையில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இ . உதயகுமாரின் மாடு சுரேஷ் எனும் நபரின் காணிக்குள் சென்றபோது அதனை சுரேஷ் கட்டி வைத்துள்ளார்.
மாடு கன்றுக் குட்டி ஈன்று 3 நாட்களே ஆகிய நிலையில். கன்று வீட்டில் அம்மாவை காணாது கத்திய வண்ணம் உள்ளது.
சுரேஷிடம் சென்று மாட்டை தருமாறு கோரியபோது, அவரும் அவரது மகனும் மற்றும் மனைவியும் சேர்ந்து உதயகுமாரை தாக்கி உள்ளார்கள்.
ரத்த காயங்களோடு அவர் புதுகுடியிருப்பு பொலிசாரிடம் சென்று முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.