அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளை இன்று (06) முதல் ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
11 நிபந்தனைகளின் கீழ் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, ஒரு பீடத்திற்கு ஒரு தடவையில் 2 வருடங்களைச் சேர்ந்த மாணவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என்பதுடன் விடுதிகளில் ஒரு அறையில் மாணவர் ஒருவர் மாத்திரமே தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை, விரிவுரை மற்றும் நூலகங்களில் சமூக இடைவௌி பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.