September 22, 2023 2:03 am

இரண்டு வாரகால வேலை நிறுத்த நடவடிக்கைகயை நிறைவுக்கு வந்தது!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் இன்று காலை 7.30 மணியுடன் சுமார் இரண்டு வாரகால வேலை நிறுத்த நடவடிக்கைகயை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நேற்று பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமையவே அவர்களது வேலை நிறுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகையினால் இன்று முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கக அதிகாரிகள் தங்களது கடமைகளுக்கு திரும்புவார்கள் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிகாட்டினார்.

1897 ஆம் இலக்க நோய் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கான மற்றும் தொற்று நோய் கட்டுப்படுத்தலுக்கான கட்டளை சட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்கள் நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்