பிரிந்து செயற்படுவதால், இலக்கை அடையமுடியாது | சம்பந்தன்

பிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “எமது அரசியல் பயணத்தில் எமது  மக்களுக்காக இந்த நாட்டில் ஒரு அரசியல் திர்வினை பெறுவதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இவ்வாறான நிலையில் அதை கடந்த ஆசிக்காலத்தில்  இடம்பெற்ற குழப்பம் காரணமாக எம்மால் அடைய முடியாமல் போனது.

பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து  செல்வதால் எவ்விதமான நன்மையும் நாம் அடையப்போவதில்லை எமது இலக்கு ஒன்று அந்த இலக்கு என்னவென்றால்    தமிழ் தேசிய இனம், தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த இடங்களில் உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்று நிம்மதியாக வாழவேண்டும் இதை பெறுவதற்காக   நாம் அனைவரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் “என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்