ஈஸ்டர் தாக்குதல் | மைத்திரியை விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

குறித்த சம்பவத்தில் ஏற்கனவே நாளையத்தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்