அதிகாலையில் கோர விபத்து! | ஐந்து பேர் பலி

குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை மோதிக்கொண்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரணவீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியர்