பொது இடங்களிலும் புகைத்தல் தடை

நாட்டிலுள்ள அனைத்து பொது இடங்களிலும் புகைத்தல் தடை செய்யப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக் தெரிவித்துள்ளார்.

தற்போது சில பொது இடங்களில் மட்டுமே புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளில் தடைசெய்யப்படவில்லை.

அனைத்து பொது இடங்களிலும் புகைத்தலை தடை செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

அத்துடன், புகையிலையையும் வெற்றிலையையும் சேர்த்து விற்பனை செய்வதும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இருப்பினும், சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆசிரியர்