பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கலாமா? | இன்று தீர்மானம்!

This image has an empty alt attribute; its file name is education-ministry.jpg

பாடசாலைகளுக்கு மாணவர்களை வழமைபோன்று அழைப்பதற்கான நிலைமை உள்ளதா என்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆராயப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

200இற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், மாணவர்களை வழமை போன்று உள்வாங்குவதற்கான சூழல் உள்ளதா என்பது தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இதேநேரம் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்மானம் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்படவுள்ளது.

ஆசிரியர்