தனிமைப்படுத்தல் பூர்த்தியானோர் 32 ஆயிரத்து 816 பேர் ஆவர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்த 32 ஆயிரத்து 816 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுதனை தடை செய்யும் தேசிய மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் 65 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை , நேற்றைய தினம் 1580 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய 12 பேருக்கே கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் 5 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 143 உள்ளது.

ஆசிரியர்