மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு உதயம்!

This image has an empty alt attribute; its file name is manivannan.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்து இருந்தார்.

இந்நிலையிலேயே மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்