இலங்கையில் நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 06 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 9  பேரும் இதில் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 193 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த தொற்றிலிருந்து இதுவரையில், 2 ஆயிரத்து 935 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 37 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்