அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபை ஆராய சிறப்புக்குழு நியமனம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபை ஆராய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சிறப்புக் குழுவொன்றினை நியமித்துள்ளது.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு நிஹால் ஜெயமன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இக்ராம் மொஹமட், எம்.எம்.சுஹைர், எல்.எம்.கே.அருளானந்தம், பிரசாந்த லால் டிஅல்விஸ், நிஹால் ஜெயவர்தன, நலின் லதுவஹெட்டி, மைத்திரி விக்ரமசிங்க, உதிதா எகலஹேவா, அனுர மேடெகொடா, மொஹான் வீரக்கோன், எஸ்.டி.ஜயசிங்க, பிரியால் விஜேவீர, மயூரபாதா குணவன்ச, ரவி அழகம மற்றும் சாந்த ஜயர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

சட்டத்தின் தாமதங்கள் மற்றும் நீதி நிர்வாகத்தை பாதிக்கும் பிற தொடர்புடைய விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக மேலும் திருத்தத்தின் அவசியத்தை பரிசீலிக்க வேண்டிய அரசியலமைப்பில் உள்ள பல பகுதிகளை இந்த குழு ஆராயவுள்ளது.

ஆசிரியர்