கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 234ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 12 பேருக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய உக்ரைன் பிரஜை ஒருவருக்கும் எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 996 பேர் மீண்டுள்ள நிலையில் இன்னும் 226 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்