ஆறு பொறியியல் பீடங்களுக்கு 405 மேலதிக மாணவர்களை உள்ளீர்க்கத் தீர்மானம்

கடந்த 2019 ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக உள்ளீர்ப்பில் பிரதான 06 பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்களை உள்ளீர்க்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேராதெனிய, ஶ்ரீ ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருஹுணு, மொரட்டுவை, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் இந்த 405 மாணவர்களும் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் என்ற வகையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடும் எண்ணம் எனக்கோ, எமது அரசாங்கத்திற்கோ இல்லை.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள, சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்திற்கு அமையவே செயல்பட விரும்புகிறோம். அதன் இலக்குகளை அடைவதே எமது நோக்கம்.

குறிப்பாக பல்கலைக்கழக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இடையில் காணப்படும் தற்போது நிலவும் பொருந்தாத தன்மைக்கு தீர்வு காண வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில் சார்ந்த பாடநெறியான பொறியியலில் இவ்வாண்டு, மேலும் 405 மாணவர்களை சேர்ப்பதன் மூலம் நாம் முன்னோக்கி ஒரு காலடியை வைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்