இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு  கூறியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்