May 31, 2023 4:50 pm

சகலருக்கும் தடுப்பூசி வழங்க அரசு உறுதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொவிட் தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க சிபாரிசு செய்யப்படும் அனைவருக்கும் அவற்றை விரைவாக பெற்றுக்கொடுக்க விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென தெரிவித்துள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் பொது மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குருணாகலை மாவட்டத்தில் தடுப்பூசிகள் வழங்கும் பணியை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க வேண்டிய தரப்புகளுக்கு வழங்குவதற்கான செயற்திட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றும். நாட்டில் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த சிறந்த வேலைத்திட்டமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவானது வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் செயல்பட்டு வருகிறது. அதன் பிரகாரம் தடுப்பூசிகளை வழங்க வேண்டிய அனைவருக்கும் விரைவில் அதனை வழங்குவோம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்