March 26, 2023 9:57 am

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் இந்த விடயம் குறித்து வாக்குமூலம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமியான ஹிஷாலினி, இம்மாதம் 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்