Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட...

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.

கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ மற்றது!

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள்...

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்!

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ஆசிரியர்

சிவில் செயற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பது சிறந்த செயற்பாடு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றமை சிறந்த செயற்பாடாகுமென ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிசேல் பெச்சலே தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்தவகையில் இலங்கை அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார் .

நேற்றைய தினம் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் பயனுள்ளதாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், சிவில் அவகாசத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதுபோன்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவையின் 48ஆவது அமர்வு ஜெனிவா நகரில் இலங்கை நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி நஸான் சமீம் கான் அமர்வை ஆரம்பித்து வைத்து கருத்துக்களை வெளியிட்டார்.

அதன் போது ஐ,நா மனித உரிமை ஆணையாளர் மிசேல் பெச்சலே, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்பித்தார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்திற் கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமர்வின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர்:

அறிக்கையை தயாரிக்கும் செயற்பாடுகளின் போது இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுத்த ஆவணங்கள் தொடர்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது உரையின் போது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக செயற்படப் போவதாக தெரிவித்திருந்தார்.

பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்தவகையில் இலங்கை அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கின்றேன்.

தேசிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படுமென நம்புகின்றேன்.

தற்போது இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார மற்றும் நிர்வாகம் தொடர்பான சவால்களுக்கு இராணுவ மயப்படுத்தல் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் நிலவும் குறைபாடுகளும் காரணமாக உள்ளன.

இந்த நிலையானது அடிப்படை உரிமை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திகளுக்கும் அழுத்தம் செலுத்துகின்றன.

உணவுப் பொருட்கள் விலை கட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களை உரிய வகையில் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த 30 ஆண்டுகளில் அவசரகால சட்டம் பிறப்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனினும் அதன் சட்ட சரத்துக்கள் மிகவும் விரிவானவை. அதனால் சிவில் பிரிவு செயற்பாடுகளில் கைவைப்பது அதிகரிக்கலாம்.

மனித உரிமை தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் எனது அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு 11 நபர்கள் காணாமற்போயுள்ள சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பில் சட்ட மாஅதிபரின் தீர்ப்பு அதில் ஒன்றாகும்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரை விடுதலை செய்வதற்கு கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைக்கு ஆலோசனை வழங்குவதற்காக சபை ஒன்றும் நியமிக்கப்பட்டது. 46/1 ஆலோசனை தொடர்பில் செயற்படுவதற்காக எனது காரியாலயம் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பில் இதுவரை சுமார் 1,20,000 சாட்சிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.

இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் மனித உரிமையை தொடர்ந்து முன்னெடுக்கும் போது நம்பிக்கை மிகுந்த முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற 46 ஆவது அமர்வின்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளுக்கிணங்க மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கை மீதான விவாதம் இன்று 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இலங்கை அதற்கு பதிலளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 48ஆவது அமர்வு எதிர்வரும் 08ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதுடன் இலங்கை உள்ளிட்ட 47 அங்கத்துவ நாடுகள் அமர்வுகளில் பங்கேற்கவுள்ளன.

இதையும் படிங்க

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

ஓடிடி-க்கு செல்லும் கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்!

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து...

மேலும் பதிவுகள்

உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்....

அமெரிக்காவில் படசூட்டிங்கில் துப்பாக்கிச்சூடு: நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி!

வாஷிங்டன்,ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக்...

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில்...

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமாகி வீடு...

மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது. 1. கிட்னி...

இதய பாதிப்பை தடுக்கும் திராட்சை!

திராட்சை பழம் பச்சை, வெள்ளை, சிவப்பு, கருப்பு என பல நிறங்களில் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஓரளவுக்கு உள்ளன.

பிந்திய செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

துயர் பகிர்வு