June 8, 2023 5:13 am

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன இராஜினாமா..?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்திய குணசேன ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளன.

மேலும் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் பிரசன்ன குணசேன ஒரு புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு ஒரு முன்னணி சேவையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்