எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானமில்லை

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 80 பில்லியன் ரூபா கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்தது.

ஆசிரியர்