அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் அனுமதிக்காக காத்திருக்கின்றது சீன கப்பல்

நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரவேண்டிய யுவான் வாங் 5 கப்பல் துறைமுகத்திற்கு வரவில்லைதுறைமுகத்திலிருந்து 600 கடல்மைல் தொலைவில் உரிய அனுமதிக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினை தொடர்ந்து இலங்கைக்கு தற்போது பயணம் மேற்கொள்ளவேண்டாம் என இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 600 கடல் மைல்தொலைவில் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்காக அனுமதியை கோரவில்லை என இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

சீனா கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்க்கவேண்டும் என சீனாவை கேட்டுக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசரசந்திப்பிற்கு சீன தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆசிரியர்