78 % மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் அரசு

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 7 ஆயிரத்து 925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பாடசாலைகளுக்கு தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புடன் போசாக்கு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்